Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 20ந் தேதி ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்?

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (15:34 IST)
தீபிகா படுகோனே ரன்வீர் சிங் திருமணம் நவம்பர் 20 ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், இவர் ஹாலிவுட்டில் நடிகர் வின் டீசலுடன் சேர்ந்து xxx என்ற படத்திலும் நடித்துள்ளார்.
 
இவரும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனான ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதாக பரவலாக கூறப்பட்டு வந்தது. பிறகு பத்மாவத் படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த போது அவர்களுக்கு நெருக்கம் அதிகமானதாக பேசப்படுகிறது. இவர்களும் விருது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழச்சிகள் என அனைத்திற்கும் ஒன்றாக சென்று வருகின்றனர்.
 
இதனால் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் எப்போது நடக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
 
இந்நிலையில் அவர்களது திருமணம் நவம்பர் 20ந் தேதி  நடக்க உள்ளதாக இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திருமணத்திற்கு 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments