Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'குளோபல் ஸ்டார்' ராம்சரணுடன் இணைந்த-பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

'குளோபல் ஸ்டார்' ராம்சரணுடன் இணைந்த-பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

J.Durai

, புதன், 6 மார்ச் 2024 (13:44 IST)
குளோபல் ஸ்டார்' ராம்சரண் -புச்சி பாபு சனா- வெங்கடா சதீஷ் கிலாறு - விருத்தி சினிமாஸ் -மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான #RC16 படத்தில் பாலிவுட் நடிகையும், பேரழகியுமான ஜான்வி கபூர் இணைந்திருக்கிறார்.
 
'குளோபல் ஸ்டார்' ராம்சரண் அடுத்ததாக 'உப்பென்னா' புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #RC16 படத்தில் நடிக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.
 
அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.
 
இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். 
 
இந்த மெகா முயற்சிக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 
 
இயக்குநர் புச்சி பாபு ஆற்றல் வாய்ந்த திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். 
 
அது உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"அரிமாபட்டி சக்திவேல்"திரை விமர்சனம்