Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ. 15 கோடி அபேஸ் செய்து சுஷாந்த்தை விட்டு ஓடிய காதலி - கைது செய்யப்படுவாரா ரியா?

Advertiesment
sushant singh rajputs
, புதன், 29 ஜூலை 2020 (12:44 IST)
சீரியலில் இருந்து படங்களில் நடிக்க துவங்கிய சுஷாந்த் சிங் கடண்டஹ் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டது அனைவரும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் பல காரணங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது சுஷாந்த் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நடிகை ரியா சக்ரவர்த்தி ரூபாய் ரூ15 கோடி சுஷாந்தை ஏமாற்றி வேறு ஒரு அக்கவுன்ட்டுக்கு மாற்றியுள்ளார். மேலும்,  ரியா ஒரு சில நபர்களுடன்  சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்து துன்புறுத்தியுள்ளார்.

சுஷாந்திற்கு மன அழுத்தம் இல்லை. மன அழுத்தத்தை ரியா உருவாக்கியுள்ளார்.  இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்களை ஏற்பாடு செய்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வைத்திருக்கிறார். எனவே அந்த மருத்துவர்களை விசாரிக்கவேண்டும். அத்துடன் கடைசியாக ரியா சுஷாந்த்தை விட்டு செல்லும்போது சுஷாந்தின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார். என அடுக்கடுக்கான பல திடுக்கிடும் குற்றங்களை முன்வைத்துள்ளார் சுஷாந்தின் தந்தை. இது அத்தனையும் நிரூபிக்கப்பட்டால் நடிகை ரியா கைது செய்து வாய்ப்பிருப்பதாக பாலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன் –ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் உருக்கமான பதிவு!