Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு ரூ.20 கோடி வரை செலவு வீணாகியுள்ளதாக தகவல்

Advertiesment
Up to Rs 20 crore was reportedly wasted
, செவ்வாய், 4 ஜனவரி 2022 (18:36 IST)
ஆர்.ஆர்.ஆர் படத்தின் விளம்பரத்திற்கு  மட்டும் ரூ.18 முதல் ரூ.20 கோடி வரை செலவளித்துள்ளது வீணாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் கோடிக்கணக்கில் செலவு செய்து புரமோஷன் பணிகள் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திடீரென தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் படக்குழுவினரின் மூலம் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்

இருப்பினும் புதிய ரிலீஸ் தேதி குறித்து அவர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை என்றும் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு  முன்னதாக  ஆர்,ஆர்,ஆர் படத்தை விளம்பரப்படுத்தும்  நடவடிக்கையில் படக்குழு ஈடுபட்டனர். அதன்படி, சென்னை, பெங்க்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு நடந்தது.  இதில் ரசிகர்களும் கலந்து கொண்டனர். 

அப்போது இப்படத்தின் புரமோஷனுக்கு மட்டும் ரூ.18 முதல் ரூ.20 கோடி வரை செலவளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படம் ரிலீஸ் இல்லை என்பதால் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ள இத்தனை கோடிகளும்  வீணாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒத்த முடிச்சில் எல்லாத்தையும் இழுத்து கட்டிய நிவேதா பெத்துராஜ்!