பெற்றோர்களே குழந்தைகளின் முன் மாதிரி உள்ளனர். அப்படியெனில், பெற்றோரின் தங்கள் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வது நல்லது.
சண்டையை தவிர்க்க வேண்டும்: என்னதான் முக்கியப் பிரச்னையாக இருந்தாலும்கூட குழந்தைகளின் முன் சண்டை போடாதீர்கள். அதனால் இரண்டு சிக்கல்களை குழந்தைக்கு நேரிடும்.
கடன்களைப் பற்றி பேசாதீர்கள். நம் குழந்தைகள் தானே என்று நினைத்து உங்களின் கடன்களையும் அவற்றை கஷ்டப்பட்டு அடைப்பதைப் பற்றிய பேச வேண்டாம்.
உறவினர்களை நண்பர்களை கேலி செய்யாதீர்கள். உங்கள் மூலமாகத்தான் உறவினர்களின் அருமைகள் குழந்தைகளுக்குத் தெரியவரும். அந்த உறவினர்களின் முன் நல்லபடியாகப் பேசிவிட்டு வீட்டில் திட்டினால் குழந்தைக்கு உறவினர் பற்றி மட்டுமல்ல, பெற்றோரைப் பற்றியும் நல்ல எண்ணம் வராமல் போய்விடும்.
நோய் குறித்துபேச வேண்டாம். உங்களுக்கு நெருக்கமாக தெரிந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் பெரிய நோய் எனில், அதைப் பற்றி விரிவாக குழந்தைகள் முன் பேசுவதைத் தவிருங்கள்.
வெற்றியைப் போலவே தோல்விகளும் வரவே செய்யும். அப்போது இடிந்துபோவது இயல்பு. ஆனால், அதை தோல்விகளைகுழந்தைகள் முன் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடலாம்.
உடலுறவு தொடர்பான பேச்சு, சைகைகளைத் தவிருங்கள். குழந்தைகள் டிவி பார்க்கிறார்கள். மொபைலில் என்னவோ விளையாடுகிறது என்று நினைத்துக்கொண்டு உடலுறவு தொடர்பான பேச்சு அல்லது சைகளைக் காட்டாதீர்கள். எந்த நொடியும் அக்குழந்தை தன் கவனத்தைத் திருப்பி உங்களைப் பார்க்க நேரிடலாம்.
தேவையற்றதை பொருள்களை வாங்காதீர்கள். அது உங்கள் குழந்தையின் திட்டமிடல் திறனைப் பாதிக்கலாம். கடன் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள். இது ரொம்பவுமே முக்கியமானது. ஒருவரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கும்பட்சத்தில் ஒரு வித தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடும். மேலும் மது, புகை - போதை தரும் உடலுக்கும் மனதுக்கும் கெடுதலான பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.