தூங்கும் போது தான் உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்கிறது. தூங்கும் போது, உடல் தேவையான அளவு ஓய்வைப் பெறுகின்றது. இந்த ஓய்வு மனம், உடல் மற்றும் ஆன்ம அமைதி பெறவும், ஒருநிலை பெறவும் உதவியாக உள்ளது.
தூங்கும் போது மூளைக்கு நல்ல ஓய்வு கிடைப்பதால், அது நல்ல சிந்திக்கும் திறனைப் பெறுவதோடு, கர்ப்ப காலத்தில் நிதானத்தோடும் செயல்பட உதவுகின்றது.
உடல் உருபுகள் தூங்கும் போது தனைத்தானே சீர் செய்து கொள்கின்றது. இதனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு தங்களை அவை தயார் செய்து கொள்கின்றது.
நல்ல தூக்கம் கிடைத்தால், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் குறையும். மேலும் மனம் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கர்ப்பிணி பெண்கள் இரவு மட்டுமல்லாது, பகல் நேரங்களிலும், சோர்வாக இருந்தாலோ, அல்லது தூக்கம் வருவது போல இருந்தாலோ, தூங்கி விடவேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக இருகின்றது.
கர்ப்ப காலத்தில் எப்போதும் நேராக படுக்கக் கூடாது என்று கூறுவார்கள். இதன் காரணமாகவே பெண்கள் பக்க வாட்டிலேயே படுக்க நேரிடும். இதனால், அவர்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி மற்றும் வேறு சில அசௌகரியங்களும் ஏற்படுகின்றது. இது அவர்களது தூக்கத்தை பெரிதும் பாதிகின்றது.
உடலில் பல மாற்றங்கள், குறிப்பாக ஹோர்மோன் ஏற்றத்தாழ்வு, இரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு என்று பல மாற்றங்கள் ஏற்படுவதால், உடல் மற்றும் மனம் அமைதியற்ற நிலையிலேயே இருக்கும். இதனால் தூக்கம் சரியாக வராமல் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகும். மேலும் கர்ப்பிணி பெண்களால் சரியாக நடக்கவும், வீட்டு வேலைகளை செய்ய முடியாமலும் போகும். இது மட்டுமல்லாது, உடலில் ஏற்படும் சில மாற்றங்களாலும், கால்களில் வலி, எரிச்சல், தசைபிடிப்பு என்று பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், கர்ப்பிணி பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவார்கள்.