2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான குரூப் பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.
2024 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் 20 அணிகள் பங்கற்கின்றன. இந்த நிலையில், 2024 உலகக் கோப்பை தொடரின் ப போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளும்; பிரிவு-பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும்; பிரிவு-சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, பாபுவா நியூகினியா அணிகளும், பிரிவு டி-ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்ற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்றின் பிரிவில் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும் சூப்பர் 8 க்கு முன்னேறும், இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதவுள்ளன.
இந்தியா முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் ஜூன் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது. உலகமே எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வரும் ஜுன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டி வரும் ஜூன் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அரையிறுதி ஆட்டங்கள் வரும்
இப்போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளன.