Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை… அதிக பவுண்டரி தூரத்தால் வென்றதா தென்னாப்பிரிக்கா?

vinoth
செவ்வாய், 11 ஜூன் 2024 (07:39 IST)
ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. ஐபிஎல் பார்த்து உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தொடர் சலிப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இதுவரை நடந்த போட்டிகள் பெரும்பாலானவை எல்லாம் குறைந்த ஸ்கோர் அடிக்கப்பட்ட போட்டிகளாகவே அமைந்துள்ளது. இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டும் 200 ரன்களை தாண்டி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய போட்டியும் குறைந்த ஸ்கோர் கொண்ட த்ரில்லரான போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 113 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணியாலும், எளிதாக ரன்களை சேர்க்க முடியவில்லை. அந்த அணி போராடி கடைசி ஓவர் வரை இழுத்து வந்தது. கடைசிப் பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் மகமதுல்லா பந்தை தூக்கி அடித்தார். அந்த பந்து எல்லைக் கோட்டருகே கேட்ச் ஆனது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. மேலும் போட்டி நடைபெற்ற மைதானத்தில்  பவுண்டரி தூரம் அதிகம் என்பதால்தான் அந்த பந்து கேட்ச் ஆனது என்றும் பவுண்டரி தூரம் குறைவாக இருந்திருந்தால் பங்களாதேஷ் அணிதான் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

2வது டி20 கிரிக்கெட்: வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசியும் இந்தியா தோல்வி..

AUS vs PAK ODI: சொந்த மண்ணிலேயே வீழ்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா! - 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments