இந்திய அணி இந்த ஆண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தயாராகி வருகிறது. இதற்காக பல இளம் பேட்ஸ்மேன்கள் அணியில் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது ஒரு முக்கியக் குறையாக உள்ளது. குறிப்பாக நான்காவது இடத்தில் யாரை விளையாட வைப்ப்து என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்திய அணியில் யுவ்ராஜ் சிங்குக்கு பிறகு நான்காம் இடத்தில் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை.” என சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது அணியின் மூத்த வீரரான அஸ்வின் இதுகுறித்து பேசும்போது “இந்திய அணியில் யுவ்ராஜ் சிங் மற்றும் தோனி ஆகியோருக்கு அடுத்து ஐந்தாவது இடத்தை சரியாக நிரப்பியவர் கே எல் ராகுல்தான். மேலும் அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது முக்கியத்துவம் பெறுகிறது” எனக் கூறியுள்ளார்.