Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (14:42 IST)
2018ம் ஆண்டு முதலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் டிம் பெய்ன். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதே சக பெண் ஊழியருக்கு பாலியல் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக இவர்மீது புகார் எழுந்தது. இதையடுத்து தனது கேப்டன் பொறுப்பை பெய்ன் ராஜினாமா செய்தார். அப்போது அவர்  “நான்கு வருடங்கள் முன்னதாக சக பெண் ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால் அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம். ஆனால் அந்த குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட்டு உள்ளதாக அறிந்தேன். இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து ஒரு வீரராக அணித்தேர்வில் இருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.  ஆனால் அவர் அதன் பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. உள்ளூர் அணியான டாஸ்மேனியா அணிக்காக விளையாடி வந்த நிலையில் இப்போது அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

அடுத்த கட்டுரையில்