Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் ஆசாம் விலகவேண்டும்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (10:51 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்த நிலையில் இந்த போட்டியை இந்திய அணி மிக எளிதாக வென்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் சொதப்பியதால் மிக எளிதாக இந்திய அணி வென்றது. இந்த போட்டிக்குப் பிறகு பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் ஆசாம் விலகிவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “பாபர் ஆசாம் பேட்டிங்கில் பல சாதனைகளைப் படைக்கலாம். ஆனால் கேப்டன்சி என்பது வேறு. அவர் நீண்ட காலமாக கேப்டன் பதவியில் இருந்தும் எதையும் சாதிக்கவில்லை. இந்தியாவிடம் தோற்றுவிட்டதால் நான் இதைக் கூறவில்லை. கேப்டன்சிக்கு நிறைய உழைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments