Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயந்துட்டியா குமாரு? கடும் விமர்சனங்க்களால் பாகிஸ்தான் செல்லாமல் அமெரிக்காவிலேயே தங்கும் பாபர் ஆசாம்!

vinoth
செவ்வாய், 18 ஜூன் 2024 (07:09 IST)
நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. அந்த அணி வென்ற போட்டிகளில் கூட மிகவும் சிரமப்பட்டே வென்றது.

இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் பாபர் ஆசாமின் கேப்டன்சியும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு சற்று முன்பாக அவர் திடீரென மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சர்ச்சைகளை எழுப்பியது. பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளரான கேரி கிரிஸ்டனே “இது ஒரு அணியே இல்லை. வீரர்களுக்குள் ஒற்றுமையே இல்லை” எனப் புலம்பியுள்ளார்.

இதனால் பாபர் ஆசாம் மீது பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையான கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி உடனடியாக தாய்நாடு திரும்ப உள்ள நிலையில் பாபர் ஆசாம் அமெரிக்காவிலேயே சில நாட்கள் தங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரோடு ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், அஸாம் கான் மற்றும் இமாம் வாசிம் ஆகியோரும் அமெரிக்காவிலேயே தங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments