இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற பிசிசிஐயின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பிசிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் வருடம் தோறும் மார்ச் மாதம் இறுதியில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.நடப்பு ஐபிஎல் சீசனில் 8 அணிகள் விளையாடின.
இனிவரும் அடுத்த ஐபிஎல் தொடரில் மேலும் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தற்போது சென்னை கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர் ஹைதராபத், டெல்லி கேபிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இடம்பெற்று விளையாடின.
இந்நிலையில், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசியின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் அடுத்த ஐபிஎல் தொடரில் புதிதாக மேலும் 2 அணிகளைச் சேர்ப்பது குறுத்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில, இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற பிசிசிஐயின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பிசிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
வரும்2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளைச் சேர்க்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.