Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 22 May 2025
webdunia

சாம்பியன்ஸ் ட்ராபிக்கான கேப்டன்கள் போட்டோஷூட்… ரோஹித் ஷர்மாவை அனுப்ப மறுக்கும் பிசிசிஐ!

Advertiesment
இந்தியா

vinoth

, புதன், 22 ஜனவரி 2025 (14:06 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது.

இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இப்போது மற்றொரு பிரச்சனையைக் கிளப்பியுள்ளது பிசிசிஐ. இந்திய அணி ஜெர்ஸியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள அரசியல் காரணமாக இப்படி பிசிசிஐ செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இப்போது சாம்பியன்ஸ் கோப்பைக்கான தொடக்க விழா மற்றும் கேப்டன்கள் போட்டோஷூட் ஆகியவற்றுக்கு இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மாவை அனுப்ப முடியாது எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக ஐசிசி தலையிட்டு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட்டுக்குள் அரசியலை திணிக்கிறது பிசிசிஐ.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம்!