பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷமி மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி கடந்த ஆண்டு பல புகார்களை முன்வைத்தார். ஷமி மனைவியின் புகாரை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரித்து வந்தனர். வழக்கு அலிபூர் நிதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஆம், ஷமி மற்றும் அவரது சகோதரருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷமி 15 நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ஷமியின் மனைவி, ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்பதால் அனைவரையும் விட தான் சக்திவாய்ந்தவர் என ஷமி நினைக்கிறார். நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஷமி மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. வழக்கு மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிகிறது.
மறுபக்கம் குற்றப்பத்திரிகையை பார்த்த பின்னர்தான், விஷயம் எப்படி இருக்கிறது என்பதையும் பிசிசிஐ-யின் சட்டதிட்டத்தின்படி நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட வேண்டுமா என்பதையும் முடிவு செய்ய முடியும் என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.