வெஸ்ட் இண்டீஸுடன் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் வரிசையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை புரிந்தார் ஜாஸ்பிரித் பும்ரா.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கான இரண்டாவது டெஸ்டின் முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி வலுவான பந்துவீச்சை மேற்கொண்டது. இந்திய இளம் பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரித் பும்ராவின் அசுர வேக பந்து வீச்சை தாங்காமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினார்கள்.
ஒன்பதாவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் டேரன் பிராவோ கேட்ச்-ல் அவுட் ஆனார். தொடர்து களம் இறங்கிய ஹமார் புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர். ஒரே ஓவரில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார் பும்ரா.
இதுவரை இந்திய பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் ஆகிய இருவர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். தற்போது அந்த வரிசையில் மூன்றாவது ஆளாக பும்ரா இணைந்துள்ளனர்.
இதுகுறித்து பும்ரா “கடைசி விக்கெட் உண்மையாகவே விக்கெட்தானா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் கேப்டன் கோலிதான் மிகவும் உறுதியாக து விக்கெட் என்பதை நம்பி மூன்றாவது நடுவரை நாடினார். இந்த சாதனைக்கு அவரும் ஒருவகையில் காரணம் என கூறியுள்ளார்”.
பும்ராவின் இந்த சாதனையை தொடர்ந்து ஹர்பஜன் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் தங்கள் ட்விட்டரில் “ஹாட்ரிக் சாதனையாளர்கள் பட்டியலுக்கு வரவேற்கிறோம்” என வாழ்த்தியுள்ளனர்.