Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

Advertiesment
When IPL 2025 resumed

Prasanth Karthick

, சனி, 10 மே 2025 (08:52 IST)

போர் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பாதியில் நின்ற ஐபிஎல் போட்டிகள்:
 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் எல்லையில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது ஆபத்தானது என்பதால் போட்டி தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தரம்சாலாவில் போட்டி நடந்துக் கொண்டிருந்தபோது பாதியிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டு மக்கள், கிரிக்கெட் வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குமா?
 

இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளை அரபு அமீரகம், அல்லது இங்கிலாந்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் உள்ள வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாடுகளுக்கு புறப்படத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அனைத்து நாட்டு வீரர்களும் ஐபிஎல் முடிந்த கையோடு அடுத்தடுத்த சொந்த நாட்டு போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், ஐபிஎல் தாமதமாவதால் பிற போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படலாம் என்பதால் அவர்கள் புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி வெளிநாட்டு வீரர்கள் வெளியேறினால், 10 ஐபிஎல் அணிகளும் உள்நாட்டு வீரர்களை வைத்து ப்ளேயிங் லெவனை தயார் செய்து விளையாடுமா? அல்லது ஐபிஎல் மொத்தமாக ரத்தாகுமா என பல கேள்விகள் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!