ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தோனி கேப்டனான பின்னர் சி எஸ் கே அணி ஒரு போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. இதனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது சிக்கலாகியுள்ளது. சி எஸ் கே அணியின் இந்த நிலைக்குக் காரணம் மாறிவரும் டி 20 போட்டிகளின் ஆட்டம் பற்றி சி எஸ் கே அணி புரிந்துகொள்ளாமல் மந்தமாகப் பேட்டிங் செய்வதுதான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி பேசியுள்ள சி எஸ் கே அணி முன்னாள் வீரர் ராயுடு “சிஎஸ்கே அணி பவர்ப்ளே மற்றும் மிடில் ஓவர்களில் ரன்களை சேர்க்க அதிரடியாக ஆடுவதில்லை. நல்ல பந்துகள் வருமென்று காத்திருக்கிறார்கள். அந்த முறை இனிமேல் வேலைக்காகாது. முன்பெல்லாம் சி எஸ் கே பேட்டிங்கைப் பார்த்துப் பயப்படுவார்கள். அப்போது பேட்ஸ்மேன்கள் நேர்மறையான அனுகுமுறையோடு ஆடினார்கள். இந்த சீசனில் சி எஸ் கே அணி மீண்டு வரும் என எனக்குத் தோன்றவில்லை” எனக் கூறியுள்ளார்.