நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பில்லை என நியூஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.
அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சிஎஸ்கே அணி இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வென்று தரவரிசை பட்டியலில் இறுதியில் உள்ளது. இதுவரை அனைத்து போட்டிகளிலும் ப்ளே ஆஃப் சென்ற அணி என பெயர் பெற்ற சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப் செல்வது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. இனிவரும் 4 போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற்றாலுமே ப்ளே ஆஃப் செல்வதற்கு நூலிழை வாய்ப்புதான் உள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நிலைமை குறித்து பேசியுள்ள முன்னாள் நியூஸிலாந்து வீரர் ஸ்கா ஸ்டைரிஸ் “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதற்கு முன்னால் சிறப்பான ஆட்டங்களை அளித்திருந்தாலும் தற்போதைய நிலவரம் மோசமாக உள்ளது. சென்னை அணி பயிற்சியாளர் ப்ளெமிங் சொன்னது போல சென்னை அணிக்கு வயதாகி விட்டது. சென்னை அணியில் டூ ப்ளஸிஸ் உள்ளிட்ட சிலரை தவிர பலர் மோசமாகவே விளையாடி வருகிறார்கள். எனவே சிஎஸ்கே ப்ளே ஆஃப்க்கு முன்னேற வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.