Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… தினேஷ் கார்த்திக் அறிவுரை!

vinoth
புதன், 30 அக்டோபர் 2024 (07:48 IST)
ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒரு வீரர் கிரிக்கெட்டின் முகமாக  இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் மற்றும் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக சாதனைகளைப் படைத்த வீரராக கோலி இருக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமையவில்லை. தன்னுடைய மோசமான ஃபார்மில் இருந்து திரும்பி கோலி கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கோலிக்கு அறிவுரை ஒன்றைக் கூறியுள்ளார். அதில் “கோலி நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இடது கை சுழலர்களை எதிர்த்து சிறப்பாக விளையாடவில்லை. இது அவருக்குப் புதியது இல்லை. ஏற்கனவே சிலமுறை இப்படி சொதப்பியுள்ளார். அவர் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாடி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைக் கண்டறிய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments