Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

vinoth
புதன், 18 செப்டம்பர் 2024 (07:26 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் 17 ஆவது சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி  ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியோடு வெளியேறியது. இது அந்த அணி ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த போட்டிக்குப் பிறகு அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். இந்நிலையில் கார்த்திக் மீண்டும் ஆர் சி பி அணிக்குள் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இணைந்துள்ளார்.

இதுபற்றி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் “நான் ஆர் சி பி அணிக்காக ஆடிய ஆண்டுகள் என்னால் மறக்க முடியாதவை. அவர்களின் ரசிகர் பட்டாளம் சிறப்பானது. அணிக்குள் பல சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். அந்த அணிக்குள் மீண்டும் ஆலோசகராக இணைவது மகிழ்ச்சியான ஒன்று. ஆர் சி பி அணிக்காக ஒரு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்கு முயற்சி பண்ணுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர் ஹசன் முகமத் படைத்த சாதனை!

மளமளவென விழுந்த விக்கெட்கள்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் சேர்ப்பு!

டிராவிஸ் ஹெட் 154 ரன்கள் விளாசல்.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments