இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸி முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் பாரம்பரியம் மிக்க ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் மூன்றை வென்ற ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இதையடுத்து ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று ஹோபர்ட்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதையடுத்து ஆஸி அணியில் ஒரு புறம் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தாலும், அந்த அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் நிதானமாக ஆடி சதமடித்தார். இதனால் ஆஸி அணி 303 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து ஆஸி வேகப்பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி அணியின் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்த, ஸ்டார்க் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸி 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.