Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

Advertiesment
Preity Zinta Glen Maxwell

Prasanth Karthick

, வியாழன், 15 மே 2025 (08:52 IST)

ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் போட்டிகளில் கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வாங்கி நடத்தி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத போதும் தீரமுடன் சீசன்களில் நின்று அணியை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் விளையாடிய நிலையில் மோசமாக ரன்களை குவித்ததுடன், சீசனின் பாதியிலேயே காயம் காரணமாக விலகினார்.

 

இந்நிலையில் மேக்ஸ்வெலை, ப்ரீத்தி ஜிந்தாவுடன் தொடர்புப்படுத்தி ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “மேடம் மேக்ஸ்வெல் உங்கள் அணிக்காக மோசமாக விளையாடுகிறார். அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாததுதான் அதற்கு காரணமா? நான் சொல்வது சரியா?” என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு கோபமாக பதிலளித்த ப்ரீத்தி ஜிந்தா “இந்தக் கேள்வியை எல்லா அணிகளின் ஆண் உரிமையாளர்களிடமும் கேட்பீர்களா, அல்லது பெண்களுக்கு மட்டும்தான் இந்த பாகுபாடு இருக்கிறதா? நான் கிரிக்கெட்டுக்குள் நுழையும் வரை, பெண்கள் கார்ப்பரேட் அமைப்புகளில் வாழ்வது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியாது. 

 

நீங்கள் நகைச்சுவைக்காக இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் உண்மையில் உங்கள் கேள்வியைப் பார்த்து நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

 

ஏனென்றால் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு உண்மையிலேயே புரிந்தால், அது அழகாக இல்லை! கடந்த 18 ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து எனது மதிப்புகளைப் பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன், எனவே தயவுசெய்து எனக்கு உரிய மரியாதையை அளித்து பாலின சார்பை நிறுத்துங்கள். நன்றி” என பதிவிட்டுள்ளார்.

 

ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த பதிலை தொடர்ந்து அந்த நபர் தனது பதிவை நீக்கிவிட்டு ஓடிவிட்டார். ஆனால் ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த பதில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!