உலக கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் கேட்ச் அவுட் ஆனது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி இன்னிங்க்ஸில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவிற்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த இன்னிங்ஸில் சுப்மன் கில் குறைந்த ரன்களில் அவுட் ஆன நிலையில் இந்த முறை அவரது ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று விளையாடியபோது ஸ்கார் போலண்ட் வீசிய பந்தை சுப்மன் கில் அடிக்கும்போது கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்ததில் அவுட் ஆனார். ஆனால் அந்த பந்து தரையில் பட்டது நன்றாக தெரிந்தும் அதை அவுட் என மூன்றாவது அம்பயர் சொன்னதாக ரசிகர்கள் இது ஏமாற்று வேலை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் கேமரூன் க்ரீன் அடுத்து பந்து வீச வந்தபோது இந்திய ரசிகர்கள் எல்லாரும் “Cheat Cheat” என கத்தியதால் மைதானத்தில் பரபரப்பு எழுந்தது. மூன்றாம் நடுவரின் இந்த செயல் நியாயமற்றது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.