Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவுக்கு எதிராக குரல் எழுப்பிய ரசிகர்கள்… ஓ இதான் காரணமா!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (07:23 IST)
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில்  பேட்டிங் செய்தது. ஆஸி அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த குறைவான இலக்கை வைத்து வெற்றிக்கு போராடிய இந்திய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தியது. ஆனால் அதன் பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷான் இணை திறமையாகவும் நிதானமாகவும் விளையாடி ஆஸி அணியை மீட்டெடுத்தது. இதன் மூலம் 43ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டியது.

இந்தியாவின் தோல்விக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு ராசியில்லாத நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்த போட்டியில் நடுவராக இருந்ததால்தான் இந்திய அணி தோற்றது என தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டி, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என இந்திய அணி தோற்ற போட்டிகளில் எல்லாம் இவர்தான் நடுவராக செயல்பட்டுள்ளார். அதனால் அவர் இந்திய அணிக்கு ராசியில்லாத நடுவர் என சொல்லி வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்து அவருக்கு நினைவுப் பரிசு வழங்கும் போது ரசிகர்கள் அவருக்கு எதிராக குரலெழுப்பினர். அதைப் பார்த்து ஷாக் ஆன ரிச்சர்ட் சிரித்துக் கொண்டே பரிசை வாங்கினார். 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments