Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

Advertiesment
குஜராத் டைட்டன்ஸ்

vinoth

, வியாழன், 3 ஏப்ரல் 2025 (10:04 IST)
18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது ஆர் சி பி.

ஆனால் நேற்று தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடிய  அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஈடாக விளையாடவில்லை. முதலில் பேட் செய்த ஆர் சி பி அணியில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறி ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவுல் 169 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 18 ஆவது ஓவரில் மிக எளிதாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆர் சி பி அணியின் ஐகான் விராட் கோலியின் விக்கெட்டை குஜராத் அணி இளம் பவுலர் அர்ஷத் கான் வீழ்த்தினார். இந்நிலையில் அவர் மேல் கோபமடைந்த கோலி வெறியர்கள் பாலிவுட் நடிகரான அர்ஷத் வாஷியை இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு சென்று திட்டி வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். சமீபகாலமாக இதுபோல ரசிகர்கள் மாற்றி மாற்றி பாராட்டுவதும் திட்டுவதும் சமூகவலைதளப் பக்கத்தில் நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!