கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த தமிழ வெற்றிக் கழகம் கட்சியின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெரும்துயரம் குறித்து பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள், சதிக்கதைகள். யார் பொறுப்பு அரசா, தவெகவா? என பலவிதமாக சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அரசு தரப்புக்கு ஆதரவாக ஒருதரப்பினரும், விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் பேசி வருகின்றனர். இதில் தமிழின் முன்னணி அரசியல் யுடியூப் தளமாக செயல்பட்டு வரும் ரெட்பிக்ஸ் இந்த கூட்ட நெரிசல் மரணம் பற்றி வீடியோ வெளியிட்டு தங்கள் கருத்தைப் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் அந்த சேனலின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கரூர் துயர சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.