Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவோடு பகல் – இரவு ஆட்டம்: கங்குலி தகவல்!

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (12:54 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ள கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டம் பகல் – இரவாக நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுநாள் வரை இந்திய அணி பல்வேறு சாதனைகளை புரிந்து வந்தாலும் பகல் – இரவு ஆட்டங்களில் விளையாடுவதை தவிர்த்தே வந்தன. ஸ்டேடிய விளக்குகளின் வெளிச்சத்தில் பிங்க் பந்தில் விளையாடுவது இந்திய அணிக்கு ஆகாத காரியமாக இருந்தது. இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பதவியேற்ற கங்குலி முதன்முறையாக வங்கதேசத்துடனான ஆட்டத்தின் போது பகல் – இரவு ஆட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்திய அணி விளையாடிய முதல் பகல் – இரவு போட்டியான அதில் வங்க தேசத்தை வீழ்த்தி சாதனை படைத்தது இந்தியா. இதை தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் ஒரு ஆட்டமாவது பகல் – இரவாக நடத்த முயற்சிகள் மேற்கொள்வதாக கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க இருக்கு தொடரில் ஒரு ஆட்டத்தை பகல் –இரவாக ஆடுவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

பிங்க் பந்து இந்தியாவுக்கு புதிது என்றாலும் ஆஸ்திரேலிய அணிக்கு அது பழக்கமானது. இதுவரை ஆஸ்திரேலிய விளையாடிய 7 பிங்க் பந்து ஆட்டங்களில் முழுவதிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடக்கும் பகல் – இரவு ஆட்டம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments