Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் 1000 ரன்கள்… சாதனைப் படைத்த இங்கிலாந்து வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் 1000 ரன்கள்… சாதனைப் படைத்த இங்கிலாந்து வீரர்!
, செவ்வாய், 11 ஜூலை 2023 (07:51 IST)
டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆட்டப் போக்கையே மாற்றும் அளவுக்கு அதிரடியாக விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. பாஸ் பால் கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்த முறையில் இங்கிலாந்து வீரர்கள் 11 ஆவது வீரர் வரை அதிரடியில் இறங்கி அதகளம் செய்கின்றனர்.

அப்படி ஒரு வீரராக உருவாகியுள்ளவர்தான் இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக். ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் இக்கட்டான நான்காவது இன்னிங்ஸில் ஹாரி ப்ரூக் 93 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார்.

இந்த இன்னிங்ஸ் மூலமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஹாரி ப்ரூக் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். 17 இன்னிங்ஸில் மொத்தம் 1,028 ரன்கள் எடுத்துள்ளார்.  அவருக்கு அடுத்த இடங்களில்1140 பந்துகளில் நியுசிலாந்தின் கொலின் டி கிராண்ட்ஹோம், 1167 பந்துகளில் நியுசிலாந்தின் ட்ம் சவுதி மற்றும் 1168 பந்துகளில் இங்கிலாந்தின் பென் டக்கெட் ஆகியோரும் இந்த படடியலில் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது நெல்லை.. குவாலிஃபையர் 2 போட்டியில் த்ரில் வெற்றி..!