உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளைப் போல இந்தியாவுக்கும் மூன்று வடிவிலான போட்டிகளுக்கு மூன்று கேப்டன்கள் தேவை என்ற குரல் எழுந்து வருகிறது.
உலகில் கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகளும் தற்போது தங்கள் கிரிக்கெட் அணிகளுக்கு ஒவ்வொரு வடிவிலான விளையாட்டுகளுக்கும் மூன்று கேப்டன்களை நியமித்துள்ளார். இதன் மூலம் கேப்டன்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும் என சொல்லப்படுகிறது.
ஆனால் இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கோலிதான் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் ஷர்மாவை டி 20 அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் எனக் கருத்துகள் எழுந்துவருகின்றன. இதுகுறித்து வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ‘இந்திய அணிக்கு கோஹ்லி, ரோகித் என இருவரையும் கேப்டனாக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கோலியை பொறுத்தவரை கேப்டனாக வேண்டும் என்றே, இவர் பிறந்துள்ளார் போல உள்ளது. ரோஹித் மும்பை அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கோஹ்லி இல்லாத போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணிக்கு வெற்றியும் தேடித்தந்துள்ளார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு ஒரு கேப்டன் மட்டும் இருக்க வேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.