இன்று மும்பையில் நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப்க்கு கடைசியாக உள்ள ஒரு இடத்திற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை அணிகள் போட்டிப் போட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று இந்த இரு அணிகளுக்குமான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மும்பையில் இன்று மாலை கனமழைக்கான அறிவிப்பு வந்துள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இரு அணியில் எந்த அணி ப்ளே ஆப் செல்லும் என முடிவை கொடுக்கும் மிக முக்கியமான போட்டி இது என்பதால் மழை குறுக்கீடுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் என அஞ்சப்படுகிறது.
அதனால் இன்று நடைபெற உள்ள மும்பை - டெல்லி போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் பார்த் ஜிண்டால் கோரிக்க்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணி வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற வேண்டிய இடத்தில் மழை குறுக்கீட்டால் 1 புள்ளி மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டது. இவ்வாறாக மழை குறுக்கீட்டால் புள்ளிகள் குறைவது ப்ளே ஆப் வாய்ப்பை பாதிப்பதால் டெல்லி முறையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K