Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்மேன் இல்லாத டீமா..? கொந்தளித்த ரசிகர்கள்! – பிசிசிஐ எடுத்த முடிவு!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (14:50 IST)
ஆஸ்திரேலியாவில் சுற்று பயண ஆட்டத்திற்கு செல்லும் இந்திய அணியில் ரோகித் ஷர்மா தேர்ந்தெடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் தொடர், டி20 ஆட்டங்களுக்கான வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் ரோகித் ஷர்மா பெயர் இல்லாதது பரவலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வந்த ரோகித் ஷர்மா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளதால் பொல்லார்ட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ரோகித் ஷர்மாவின் காயம் காரணமாகவே அவரை ஆஸ்திரேலிய சுற்றுபயண ஆட்டத்திற்கு தேர்ந்தெடுக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதால் நாளை ரோகித் ஷர்மாவிற்கு தகுதி சோதனை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ரோகித் தகுதி பெறும் நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் மேட்ச்சில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments