நேற்று நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் தனக்கு வாய்ப்பு கிடைத்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்று பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் – இந்தியா அணிகள் மோதும் போட்டி தொடங்கியது. ரோகித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் ஆளுக்கு ஒரு அரை சதம் வீழ்த்தி விக்கெட்டை இழந்த நிலையில் மழை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் களம் இறங்கிய விராட் கோலியும், கே.எல்.ராகுலும் வரலாறு காணாத பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை பந்தாடி ரன்களை குவித்தனர். இந்த போட்டியில் 100 பந்துகளுக்கு 100 ரன்கள் அடித்து நீண்ட காலம் கழித்து மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் கே.எல்.ராகுல்.
இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய கே.எல்.ராகுல் “போட்டிக்கான டாஸ் போடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னாள் நீ இந்த போட்டியில் விளையாடுகிறாய் என அணி பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் சொன்னார். நான் மைதானத்திற்கு எந்த உபகரணங்களையும் எடுத்து வரவில்லை. வீரர்களுக்கு தண்ணீர் கேன் கொடுக்கும் வேலையைதான் செய்வேன் என நினைத்து வந்தேன்” என கூறியுள்ளார்.