ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. 20 அணிகள் மோதுகின்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.
ஜூன் மாதம் 2 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை ஜூன் 29 ஆம் தேதி நிறைவடைகிறது. அரையிறுதிப் போட்டிகளில் ஜூன் 26 ஆம் தேதி காலை 6 மணிக்கும், ஜூன் 27 ஆம் தேதி இரவு 8 மணிக்கும்(இந்திய நேரப்படி) நடக்கின்றன. இதில் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் பட்சத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியில்தான் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கோடிக் கணக்கான பார்வையாளர்களைக் கணக்கில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த போட்டிக்கான ரிசர்வ் டே அறிவிக்கப்பட்வில்லை. மாறாக கூடுதல் நேரம் ஒதுக்கி அந்த போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.