Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - அயர்லாந்து மோதும் டி20 போட்டி: வெற்றி யாருக்கு?

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (11:55 IST)
இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இன்று டி20 போட்டியில் மோதவுள்ளது. 
 
இந்த போட்டி இந்திய நேரப்படி 8.30 மணிக்கு டப்ளின் நகரில் நடைபெறயுள்ளது. இந்த போட்டி அவ்வளவு முக்கியமானது இல்லை என்றாலும், அடுத்து இங்கிலாந்துடனான போட்டிக்கு இது உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. 
 
கேரி வில்சன் தலைமையிலான அயர்லாந்து அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுக்க முயற்சிக்கும். இந்திய அணி வீரர்கள் எதிரணியை மெத்தனமாக எடுத்துக்கொள்ளகூடாது. 
 
2009 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடரின் போது இவ்விரு அணிகள் ஒரு போட்டியில் விளையாடி அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  
 
வீரர்கள் பட்டியல்: 
இந்தியா: விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், தோனி, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், சித்தார்த் கவுல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ்.
 
அயர்லாந்து: கேரி வில்சன், பால்பிர்னி, பீட்டர் சாஸ், ஜார்ஜ் டாக்ரெல், ஜோஷ் லிட்டில், ஆன்டி மெக்பிரைன், கெவின் ஓ பிரையன், வில்லியம் போர்ட்டர்பீல்டு, ஸ்டூவர்ட் பாய்ன்டிர், பாய்ட் ராங்கின், ஜேம்ஸ் ஷனோன், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments