Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

“மழையால் ஓவர் குறைக்கப்பட்டாலும் திட்டம் இருக்கும்… “ கேப்டன் ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

“மழையால் ஓவர் குறைக்கப்பட்டாலும் திட்டம் இருக்கும்… “ கேப்டன் ரோஹித் ஷர்மா நம்பிக்கை!
, ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (08:32 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசியுள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்க உள்ளது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டாணங்கள் அனைத்தும் அறிவித்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்நிலையில் நேற்று முன் தினம் வரை மெல்போர்னில் மழை பெய்துள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. இந்நிலையில் இந்த போட்டி பாதிக்கப்பட்டால் புள்ளிகள் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அதனால் இந்த போட்டியின் மூலம் விளம்பரங்களின் வாயிலாக வரவேண்டிய தொகை ஒளிபரப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த போட்டியின் எதிர்பார்ப்பு காரணமாக விளம்பரக் கட்டணம் அதிகளவில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மழையால் போட்டி பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால் அதற்கும் தயாராக இந்திய அணி உள்ளதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். மேலும் அவர் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 ஓவர்களில் வீழ்த்தியதை குறிப்பிட்டும் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. வருண்பகவான் வழிவிடுவாரா?