வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கிடையே பெண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீசை 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி வீழ்த்தியது.
செயிண்ட் லூசியாவில் வெஸ்ட்-இண்டீஸ் அணிகளுக்கிடையே பெண்களுக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.
முதலில் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அடுத்ததாக 186 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளில் 101 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது. இதன் படி 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் அணியில் ஷபாலி வர்மா 73 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 67 ரன்களும் குவித்து விக்கெட் இழந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இந்தியா உள்ளது.