இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் சில்வாவின் சதம் இலங்கை அணியை தோல்வியில் இருந்து மீட்க உதவியது. இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஐந்தாவது நாள் போட்டி முடிவடைந்தது. இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதமும் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் ரன் குவிக்க சற்று தடுமாறினர். இதனால் போதுமான ரன் குவிக்க நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேரமின்மையும் இலங்கை அணியை வீழ்த்த முடியாமல் போனதற்கு ஒரு காரணமாய் அமைந்தது. ஜடேஜா இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மூன்ராவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் சந்திமால் தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்தார்.