பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்து, லக்னோவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 15-வது போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாட இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.
எனவே பெங்களூர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், தொடக்க வீரர்களான விராட் கோலி 61 ரன்களும், பிளசிஸ் 79 ரன்களும் அடித்து வலுனான தொடக்கம் கொடுத்தனர்.
இதையடுத்து, மேகெஸ்மெல் 59 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில், பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்து, லக்னோவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
லக்னோ அணியின் சார்பில், மார்க் வுட் மற்றும் மிஸ்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
தற்போது பேட்டிங் செய்து வரும் லக்னோ அணியில், 1 விக்கெட் இழப்பிற்கு 2.2 ஓவரில் 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.