Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே டைம்ல ரெண்டு போட்டி..! இப்படி சொன்னா எப்படி? – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (08:43 IST)
ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. பொதுவாக வார இறுதி நாட்களில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் மதியம் 3.30 மணிக்கு ஒரு போட்டியும், மாலை 7.30 மணிக்கு மற்றொரு போட்டியும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த லீக் ஆட்டத்தின் இறுதி ஆட்டம் அக்டோபர் 8ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டியும், ராயல் சேலஞ்சர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில், அதாவது மாலை 7.30 க்கு நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனால் ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடந்தால் எந்த போட்டியை பார்ப்பது என ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments