இந்தியாவில் பிரபலமாக உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐசிசியின் பட்டியலில் இணைய உள்ளதாக பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2008ல் தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த போட்டிகளில் இந்திய அணி வீரர்களுடன் மற்ற நாட்டு வீரர்களும் இணைந்து விளையாடி வருகின்றனர்.
ஆனால் ஐபிஎல் போட்டிகள் ஐசிசியின் ”Future tour programme” பட்டியலில் இல்லாததால், பிறநாட்டு சுற்றுத் தொடர் போட்டிகள், ஐசிசி போட்டிகள் இல்லாத காலக்கட்டத்தை கணக்கிட்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டியுள்ளது. மேலும் இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்வதிலும் சிக்கல்கள் உள்ளது.
இந்நிலையில் விரைவில் ஐபிஎல் போட்டிகள் ஐசிசியின் அட்டவணையில் இணைக்கப்பட உள்ளதாகவும், அவ்வாறு இணைத்தபின் ஐபிஎல் நடைபெறும்போது வேறு சர்வதேச போட்டிகள் நடக்காது என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.