Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: வார்னருக்கு தடை விதித்த அதிகாரி ராஜினாமா

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (16:50 IST)
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய வார்னர், ஸ்மித் மற்றும் பேன்கிராப்ட்டிற்கு தடை விதித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தினார். இதையடுத்து, ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். 
 
இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்தது. அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜேம்ஸ் சதர்லெண்ட் செயல்பட்டார்.
 
இந்நிலையில் ஜேம்ஸ் சதர்லெண்ட் இன்று தனது தலைமை செயல் அதிகாரி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இவர் 2001ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments