நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆஃப்ரிகாவுக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் ஒரு தருணத்தில் கோபமுற்ற விராட் கோலி, ஸ்டம்பை பலமாக அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆஃப்ரிக்காவுக்கு இடையே நடைபெற்ற டி 20 இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆஃப்ரிக்கா அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனிடையே முதல் இன்னிங்க்ஸில் 10 ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசியபோது, அதனை தென் ஆஃப்ரிக்க வீரர் பவுமா எதிர்கொண்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை வீசியபோது, பவுமா அடித்ததில் பந்து ஸ்ரெயாஸை நோக்கி சென்றது. ஸ்ரேயாஸ் பந்தினை பிடித்து வீசுவதற்குள் பவுமா இரண்டு ரன்கள் ஓடிவிட்டார். பின்பு மூன்றாவது ரன் ஓடுகையில் ஸ்ரேயாஸ் பந்தை வீசிய ஸ்டெம்ப் பக்கத்தில் யாருமில்லாததால் விராட் கோலி ஓடிச்சென்று பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடித்தார். ஸ்ரேயாஸின் தாமதமான பந்து வீச்சால் கோபப்பட்ட விராட் கோலி ஸ்டம்பை பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஸ்டம்ப் கீழே விழுந்து லேசான கீறல் விழுந்தது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது. மேலும் முன்னாள் கேப்டன் தோனி போல் ”கூலாக” இருங்கள் என்று விராட் கோலிக்கு பல கிரிக்கெட் ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.