Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ராவை இந்தநாட்டின் சொத்து என்று அறிவிக்கவேண்டும்… கோலி பாராட்டு!

vinoth
வெள்ளி, 5 ஜூலை 2024 (08:23 IST)
நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இதனால் 140 கோடி இந்திய மக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இதையடுத்து பார்படாஸில் புயல் வீசியதன் காரணமாக இந்திய அணி தாய்நாடு வந்து வெற்றிக் களிப்பில் ஈடுபடுவதற்கு தாமதமாகியது.

இந்நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து பாராட்டு விழா நடந்தது. அப்போது வீரர்கள் பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்டோர் வெற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசினர். அப்போது பேசிய கோலி “இந்த வெற்றிக்கு ஒரே ஒருவர்தான் முக்கியமானக் காரணம். இறுதிப் போட்டியின் ஒரு கட்டத்தில் நாங்கள் தோற்றுவிடுவோம் என நினைத்தேன். ஆனால் அவர்தான் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அவர்தான் சிறப்பாக செயல்பட்டார். இந்த தொடரின் நாயகன் அவர்தான். அவர் வேறு யாருமில்லை பும்ராதான். அவரை நம் நாட்டின் சொத்து என அறிவிக்கவேண்டும் என யாராவது கையெழுத்து இயக்கம் நடத்தினால் அதில் முதல் கையெழுத்து என்னுடையததாகதான் இருக்கும் “ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓராண்டுக்குப் பிறகு நாளை கிரிக்கெட் களம் காண்கிறார் ஷமி!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக முடிவு?

ஆஸ்திரேலிய தொடர்… கோலியின் முகத்தை முன்னிலைப் படுத்தும் ஆஸி ஊடகங்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!

சி எஸ் கே அணி என்னை எடுக்கும் என்று நம்புகிறேன்… வெளிப்படையாகக் கேட்ட தீபக் சஹார்!

அடுத்த கட்டுரையில்
Show comments