Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லக்னோ ஜெயிண்ட் அணி விளையாடியது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.
எனவே முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் காக் 16 ரன்னும், பாண்ட்யா 49 ரன்னும், மார்கஸ் ஸ்டோனிஸ் 89 ரன்னும் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்து, மும்பை அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
மும்பை அணி தரப்பில், ஜேசன் 2 விக்கெட்டும், அகாஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணியில்,. இஷான் கிஷன் 39 பந்துகளில் 59 ரன்னும் ரோஹித்சர்மா 25 பந்துகளில் 37 ரன்னும், டேவிட் 19 பந்துகளில் 32 ரன்னும் அடித்தனர்.
20 ஒவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது.
எனவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி தரப்பில், ரவி பிஸ்னொய் , யாஷ் தகூர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். மொசின் கான் 1 விக்கெட் கைப்பற்றினார்.