Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மிடில் ஆர்டர் பிரச்சனை; ரோகித், கோஹ்லி இடங்கள் பறிபோக வாய்ப்பு

மிடில் ஆர்டர் பிரச்சனை; ரோகித், கோஹ்லி இடங்கள் பறிபோக வாய்ப்பு
, செவ்வாய், 24 ஜூலை 2018 (15:57 IST)
இந்திய அணியில் தொடர்ந்து மிடில் ஆர்டர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் இதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 
இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் பார்ம் அவுட் ஆன பிறகு அவர் அணியில் நீண்ட காலமாக இடம் பிடிக்கவில்லை. இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் யாரை களமிறக்குவது என்ற பிரச்சனை தொடர்ந்து வருகிறது.
 
இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் விளையாடிய போது ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி அசத்தினார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.
 
இதனால் இங்கிலாந்து தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரச்சனை மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி, ராகுலை 4வது இடத்தில் களமிறக்கினால் மிடில் ஆர்டர் பிரச்சனை தீரும் என்றார்.
 
உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு துவங்க உள்ள நிலையில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்சனையை விரைவில் தீர்க வேண்டும் முன்னாள் வீரர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் அருமையான ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
தற்போது மூன்றாம் இடத்தில் களமிறங்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அவரது இடத்தை கே.எல்.ராகுலுக்கு விட்டுக்கொடுத்து நான்காம் வரிசையில் ஆடலாம்.
 
மிடில் ஆர்டரில் ஆடுவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் சரியான தேர்வாக இருப்பார். எனவே அவரை நான்காம் வரிசையில் இறக்கி விடலாம்.
 
ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 4ஆம் வரிசையில் இறங்கி ஆடியுள்ளார். அதனால் ரோகித்தை 4ஆம் வரிசையில் இறக்கிவிட்டு கே.எல்.ராகுலை தவானுடன் ஓப்பனிங் இறக்கலாம்.
 
சஞ்சய் மஞ்சரேக்கர் இவ்வாறு இந்திய அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்க்க மூன்று விதமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய ஜூனியர் தடகளப் போட்டி - தங்கம் வென்ற தமிழக வீரர்