Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்க உள்ள நான்கு வீரர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

vinoth
புதன், 30 அக்டோபர் 2024 (14:27 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சொந்த அணி ரசிகர்களாலேயே கேலி செய்யப்பட்ட அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்தது.  ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்குக் கேப்டனாக்கப் பட்டது சர்ச்சைகளை உருவாக்கியது. ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் அவரையும் அணி நிர்வாகத்தையும் கடுமையாக கேலி செய்ய தொடங்கினர். அவர் டாஸ் போட வரும்போது கூட ரசிகர்கள் அவரை கூச்சல் போட்டு அவமானப்படுத்தினர். ஆனால் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும் அனைத்தும் தலைகீழாக மாறியது.

இதையடுத்து அடுத்த சீசனில் ரோஹித் ஷர்மா ஏலத்துக்கு சென்று வேறு அணிக்குத் தாவவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையான பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அணியை மறுபடியும் கட்டமைக்க பல பணிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பழைய பயிற்சியாளர் ஜெயவர்த்தனே மீண்டும் பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டுள்ளார்.

அவர் ரோஹித் ஷர்மாவிடம் பேசி அவரை சம்மதிக்கவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி அதிக தொகை கொடுத்து தக்கவைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதற்குப் பதிலாக அவர் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாட சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய நால்வர் தக்கவைக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments