மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது. இதை சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் விரும்பவில்லை எனவும் அதனால் அவர்கள் வேறு அணிகளுக்கு டிரேடிங் முறையில் தாவக்கூடும் என சொல்லப்பட்டது.
ஆனால் இதுவரை அவர்கள் அதுபோல எந்தவொரு முடிவையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் ஐபிஎல் அணிகளிலேயே மும்பை இந்தியன்ஸ் போல தங்கள் அணி வீரர்களை எந்தவொரு நிர்வாகவும் இவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொள்வதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அம்பானிக்கு சொந்தமான உயர்தர மருத்துவமனையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் குடும்பத்தினருக்கு எப்போது வேண்டுமானாலும் இலவச சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதுபோல மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கான உயர்தர பயிற்சி மைதானங்களை அமைத்துக் கொடுத்துள்ளனராம். அதே போல மும்பை வீரர்களை சொந்த செலவில் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அழைத்து செல்லும் என சொல்லப்படுகிறது. இவற்றின் காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என கிரிக்கெட் வீர்ரகள் ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.