Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அடுத்த மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை மொத்தமாகக் கைநழுவ நினைக்கும் மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை மொத்தமாகக் கைநழுவ நினைக்கும் மும்பை இந்தியன்ஸ்!
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (08:05 IST)
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு அந்த அணிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மாவும் இதுவரை ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை.

இந்நிலையில் இதைவிட பெரிய அதிர்ச்சி ஒன்று ரோஹித் ஷர்மா ரசிகர்களுக்கு 2025 ஆம் ஆண்டு காத்திருக்கிறது என சொல்லப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவை ஏலத்தில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மெகா ஏலத்தில் நான்கு பேரை மட்டுமே தக்கவைக்க முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியவர்களை மட்டுமே தக்கவைக்கும் எனவும் ரோஹித் ஷர்மாவை விடுவித்து விடும் எனவும் சொல்லப்படுகிறது. அதனால் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2024 ஆம் ஆண்டில் மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் இந்திய அணி… ரசிகர்கள் அதிர்ச்சி!