இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 100 ரன்கள் என்ற இலக்கை இந்தியா கடைசி பந்து வரை கொண்டு சென்று வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 100 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி கடைசி நேரத்தில் 19.5 வது ஓவரில் 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 239 பந்துகள் வீசப்பட்டது. ஆனால் ஒரு சிக்ஸர் கூட இரு அணி பேட்ஸ்மேன்களாலும் அடிக்க முடியவில்லை. வழக்கமாக 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் கூட 100க்கும் கீழான ஸ்ட்ரக் ரேட்டில் விளையாடினார். இந்த ஆடுகளம் டி 20 போட்டிகளுக்கான ஆடுகளம் இல்லை என்றும் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் முன்னாள் வீரர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.